Home » , , » கிராம இராஜ்ய திட்டத்தை உடன் வாபஸ் பெற வேண்டும் - சபையில் கூட்டமைப்பு கோரிக்கை

கிராம இராஜ்ய திட்டத்தை உடன் வாபஸ் பெற வேண்டும் - சபையில் கூட்டமைப்பு கோரிக்கை

அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் 13ஆவது திருத்­தத்­துக்­குட்­பட்­ட­வாறு தற்­போது மாகாண சபை­களில் இருந்து வரு­கின்ற குறைந்­த­ளவு அதி­கா­ரங்­க­ளையும் பறித்­தெ­டுப்­ப­தா­கவே அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­படும் கிராம இராஜ்ய திட்டம் உள்­ளது.

இதனை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். கிராம இராஜ்ய திட்­டத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கடு­மை­யாக எதிர்க்­கி­றது. எனவே அர­சாங்கம் இதனை மீளப்­பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்று பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நேற்று சபையில் தனது நிலைப்­பாட்டை அறி­வித்­தது.

வடக்­கு, -­கி­ழக்கின் யுத்த இழப்­புக்­க­ளையும் அழி­வு­ க­ளையும் எழுந்­துள்ள தேவை­க­ளையும் மதிப்­பீடு செய்­யாது வடக்­கு-­, கி­ழக்கின் அபி­வி­ருத்­திக்­கென்றும் மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­த­லுக்­கென்றும் 2016 இல் இடம் பெறும் உதவி வழங்­குநர் மாநாட்டில் எந்த அடிப்­ப­டையில் பிர­தமர் நிதியைக் ­கோ­ரப்­போ­கின்றார்? இது பாரிய பிரச்­சி­னைக்­கு­ரிய விட­ய­மாக இருக்­கின்­றது என்றும் அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யது.

இதே­வேளை, வடக்­கு-­, கி­ழக்கில் இடம்­பெறும் மீள் குடி­யேற்றம், மீள­மைப்பு, அபி­வி­ருத்தி ஆகிய அனைத்து விட­யங்­க­ளிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபைப் பிர­தி­நி­தி­க­ளையும் இணைத்துக் கொண்டு பணி­களை முன்­னெ­டுக்கும் பட்­சத்தில் ஒத்­து­ழைப்­புக்­களை நல்க தயா­ரா­கவே உள்ளோம். வர­வு-­ – செ­ல­வுத்­

திட்­டத்தில் எமக்கு அதி­ருப்தி நிலை­யொன்று காணப்­பட்டு வரு­கின்ற போதிலும் பிரச்­சி­னைக்­கான தீர்வுஎன்ற பய­ணத்­திற்­காக நாம் அர­சாங்­கத்­தோடு முரண்­ப­டாது நிதி ஒதுக்­கீட்­டுச்­சட்­டத்­துக்கு எதிர்ப்­பி­னைக்­காட்­டாது செயற்­பட்டு வரு­கிறோம் என்றும் கூறி­யது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை இடம்­பெற்ற 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு - செல­வுத்­திட்­டத்தின் தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அபி­வி­ருத்தி உபாய முறைகள் மற்றும் சர்­வ­தேச வர்த்­தகம், நிதி அமைச்­சுக்கள் மீதான குழு நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

2015 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் பாது­காப்பு அமைச்­சுக்­கென 294 பில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் 2016ஆம் நிதி­யாண்­டுக்­கான வர­வு-­செ­ல­வுத்­திட்­டத்தில் பாது­காப்­புக்­கென மேல­தி­க­மாக 13 பில்­லியன் ரூபாவை அதி­க­ரித்து மொத்­த­மாக 307 பில்­லியன் ரூபாவை ஒதுக்­கீடு செய்­துள்­ளது.

வல்­லமை கொண்ட நாடு­களில் கூட பாது­காப்­புக்­கான நிதி­யா­னது திட்­டத்தின் மொத்த ஒதுக்­கீட்டில் 4 முதல் 7 வீத­மான தொகை­யி­னையே ஒதுக்­கீடு செய்து வரு­கின்­றது யுத்தம் ஒன்று இல்­லாத நிலையில் இங்கு 14 வித­மான நிதியை பாது­காப்­புக்கு ஒதுக்­கி­யி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அதே­போன்று வடக்­கு-­கி­ழக்கு மாகா­ணங்கள் யுத்­தத்தில் பாது­காக்­கப்­பட்ட மக்­களைக் கொண்­டி­ருக்­கி­றது. எனினும் அந்த மாகா­ணங்­களின் அபி­வி­ருத்­திக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி­யா­னது மிக அற்­ப­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கி­றது.

குறிப்­பிட்டுக் கூறு­வோ­மானால், வடக்கின் அபி­வி­ருத்தி கட்­ட­மைப்­புக்­கென 16 பில்­லியன் ரூபாவே ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனாலும் கொழும்­பிற்கும் தெற்­கிற்கும் என அதி­க­ரித்த நிதி ஒதுக்­கீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. அதா­வது, எம்­மி­டத்தில் வரியைப் பெறு­கின்ற அர­சாங்கம் அத­னூ­டாக எமது பகு­தி­க­ளுக்கு செல­வி­டு­வதை விடுத்து அந்த நிதியை தெற்­கிற்­காக ஒதுக்கி கொண்­டுள்­ளது.

எமது வரிப்­ப­ணத்தை தெற்­கிற்­காக செல­வி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ள அர­சாங்கம் வடக்­கு-­கி­ழக்கின் அபி­வி­ருத்­திக்கும் மீள் குடி­யேற்றம் உள்­ளிட்ட மீள்­கட்­டி­யெ­ழுப்­புதல் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் என 2016 இல் இடம்­பெ­ற­வுள்ள உதவி வழங்­குனர் மாநாட்டில் நிதி உத­வி­யைக்­கோரப் போவ­தாகக் கூறு­கின்­றது.

இது தொடர்பில் பிர­தமர் இன்றும் கூறி­யுள்ளார்.

யுத்­தத்தில் அழி­வுக்­குள்­ளான இழப்­புக்­களை சந்­தித்­துள்ள வடக்­கு-­கி­ழக்கின் உண்­மை­யான நிலை­வ­ரங்­களை மதிப்­பீடு செய்­யாத நிலையில் எந்த அடிப்­ப­டை­யைக்­கொண்டு உதவி வழங்­குனர் மாநாட்டில் பிர­தமர் உதவி கோரப்­போ­கிறார் என்­பது புரி­ய­வில்லை.

வடக்­கு-­கி­ழக்கில் அர­சாங்கம் மேற்­கொள்­கின்ற எந்­த­வொரு வேலைத்­திட்­டங்­களின் போதும் அதா­வது மீள்­கு­டி­யேற்றம், மீள­மைப்பு, அபி­வி­ருத்தி ஆகி­ய­வற்றை முன்­னெ­டுக்கும் சந்­தர்ப்­பத்தில் எமது மக்கள் பிர­தி­நி­தி­களும் இணைத்துக் கொள்­ளப்­ப­டுதல் முக்­கி­ய­மா­ன­தாகும். எம்­மையும் இணைத்து எமது ஆலோ­ச­னை­களும் உள்­வாங்­கப்­படல் வேண்டும்.

மேலும் தற்­போது கிராம இராஜ்யம் என்­ற­தொரு அறி­விப்பை மாகாண சபை­க­ளுக்கு அதனை நடை­மு­றைப்­ப­டு­வத்­து­வ­தற்கு முயற்­சிக்­கப்­பட்டு வரு­கி­றது. இது வெறும் அறிக்கை ரீதி­யி­லான அறி­விப்­பா­கவே இருந்து வரு­கி­றது. இது அர­சி­ய­ல­மைப்­புச்­சட்­டத்தின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­தி­னூ­டாக மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள குறைந்த பட்ச அதி­கா­ரங்­க­ளையும் இல்­லா­தொ­ழிக்­கவே செயற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே கிராம இராஜ்யம் செயற்­றிட்­டத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­கிய நாம் எதிர்க்­கின்றோம்.

அர­சாங்­கத்­தினால் எந்­த­வொரு திட்டம் முன்­வைத்­தாலும் அது நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் நன்மை பயப்­ப­தா­கவே இருந்­தாலும் மக்­களின் விருப்­பத்தை அறி­யாத எந்­த­வொரு திட்­டமும் வெற்­றி­ய­ளிக்­கப்­போ­வ­தில்லை. இதில் எமது மக்­க­ளுக்கு சந்­தே­கத்­துக்கு இட­ம­ளிக்க முடி­யாது. இருக்கும் அதி­கா­ரங்­களை குறைக்கும் திட்­டத்தை நாம் ஏற்கமாட்டோம்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதிகாரம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

அதன்பின்னர் வேண்டுமானால் இத்திட்டம் குறித்து பரிசீலிக்கலாம்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பேரவை தீர்மானித்திருக்கின்ற நிலையில் இதனை சர்வதேசமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் வரவு-செலவுத்திட்டம் தொடர்பில் எமக்கு அதிருப்தி காணப்பட்டு வருகின்ற போதிலும் கூட தேசிய பிரச்சினைக்கு தீர்வு அதிகார பகிர்வு ஆகியவற்றை இலக்காகக்கொண்டு செயற்பட வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது என்றார்.

0 comments:

Post a Comment

-->