Home » , , » 25 வருடங்களாக வீதியில் நிற்கும் மக்களை மீள்குடியேற்றாத அரசு தீர்வை முன்வைக்குமா? - யாழ்.ஆயர் கேள்வி

25 வருடங்களாக வீதியில் நிற்கும் மக்களை மீள்குடியேற்றாத அரசு தீர்வை முன்வைக்குமா? - யாழ்.ஆயர் கேள்வி

புதிய அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்கி அர­சியல் தீர்வு கொண்டு வரப்­படும் என அர­சாங்கம் கூறு­கின்­றது. கடந்த 25 வரு­டங்­க­ளாக வடக்கில் இடம்­பெ­யர்ந்து வாழும் மக்­களை மீளக்­கு­டி­யேற்ற தயக்கம் காட்டும் இந்த அர­சாங்கம் தீர்­வைக்­கொண்டு வரு­மென எவ்­வாறு நம்ப முடியும் என யாழ். மாவட்ட புதிய ஆயர் ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் கேள்வி எழுப்­பினார்.

அண்­மையில் யாழ். மாவட்ட ஆய­ராக பொறுப்­பேற்­றுக் ­கொண்ட வண.கலா­நிதி ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் அவர்­க­ளிடம் வட­ப­குதி மக்கள் படும் இன்­னல்கள் அர­சியல் சூழ்­நி­லைகள் குறித்து ஊடகம் ஒன்று எழுப்பி கேள்விக்கே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,

கடந்த கால் நூற்­றாண்டு கால­மாக இடம்­பெ­யர்ந்த மக்கள் தெருவில் நின்று கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு புதிய அர­சாங்கம் இது­வரை தீர்­வைக்­கா­ண­வில்லை. இவ்­வாறு இருக்­கும்­போது புதிய அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்கி தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்­வொன்று விரைவில் காணப்­ப­டு­மென அர­சாங்கம் கூறு­வதை எப்­படி தமிழ் மக்கள் நம்ப முடியும்? இதே­போன்­ற­தொரு நிலைதான் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­கா­ரத்­திலும் காணப்­ப­டு­கின்­றது.

இது ஒரு­பு­ற­மி­ருக்க தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளி­டமோ அர­சி­யல்­வா­தி­க­ளி­டமோ ஒற்­று­மை­யில்லை. ஒரு கூட்­டுப்­போக்­கில்லை. இவ்­வா­றா­ன­தொரு சம­மற்ற சூழ்­நி­லையில் அர­சியல் தீர்வு, கிடைக்கும் சுபீட்­ச­மான எதிர்­காலம் தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்­கு­மென எதை வைத்து நம்ப முடியும்.

தமிழ் மக்கள் கடந்த பல தசாப்த கால­மாக பட்ட துன்­பங்­க­ளுக்கு நிரந்­தர தீர்­வொன்று காணப்­பட வேண்டும். அந்த தீர்வு அர­சியல் ஸ்திரம் கொண்­ட­தாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் எப்­போதும் பிரிந்து வாழ எண்ணம் கொண்­ட­வர்கள் அல்லர். ஒரு தேசத்­துக்குள் ஒன்று சேர்ந்த மக்­க­ளா­கவே வாழ விரும்­பு­கின்­றார்கள். ஆனால் இந்­நாட்டில் ஏனைய சமூ­கத்­தவர் எத்­த­கைய உரி­மை­களை கொண்­ட­வர்­க­ளாக வாழு­கின்­றார்­களோ அதே­போன்று சகல உரி­மை­களைப் பெற்­ற­வ­ராக மதிப்­பு­டனும் கௌர­வத்­து­டனும் வாழக்­கூ­டிய ஓர் அர­சியல் தீர்­வொன்­றையே வேண்டி நிற்­கின்­றனர். தமிழ் மக்கள் தங்­க­ளுக்­கு­ரிய நீதி­யான நிரந்­த­ர­மான தீர்வை அர­சியல் வடிவில் பெற்­றுக்­கொள்­வ­தற்கு நீண்ட கால­மாக போராடி வந்­துள்­ளனர் என்­பதை கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

தற்­போது அவர்கள் எதிர்­பார்ப்­ப­தெல்லாம் நியா­ய­மா­னதும் நீதி­யு­மா­ன­து­மான ஒரு தீர்­வாகும். அந்த தீர்வை கொண்டு வரு­வ­தற்கு உரிய சாச­னங்­களை வரைந்து சட்­டங்­களை இயற்றி சகல இனங்­களும் ஒற்­று­மை­யாக வாழும் சூழ்­நி­லை­யொன்றை தற்­போ­தைய புதிய அர­சாங்கம் உண்­டாக்கி கொடுக்க வேண்டும். இன்னும் புரி­யும்­படி சொல்­வ­தானால் சிங்­கள மக்­களை தமிழ் பேசும் மக்கள் மதிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்­களை பெரும்­பான்மை சிங்­கள மக்கள் கௌர­வ­மாக நடத்த வேண்டும். இவ்­வகை சூழ்­நி­லையே சிறந்த நல்­லி­ணக்­க­மாக இருக்க முடியும். இத்­த­கை­ய­தொரு நற்­சூ­ழலை கொண்டு வரும் அர­சியல் தீர்­வையே தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள்.

இதி­லுள்ள தர்­ம­சங்­க­ட­மான நிலை­யென்­ன­வென்றால் தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் அர­சியல் தீர்­வொன்றை சிங்­க­ளத்­த­லை­வர்கள் கொண்­டு­வர முயற்சி எடுப்­பார்­க­ளானால் சிங்­கள மக்கள் மத்­தியில் தங்­க­ளுக்­கு­ரிய செல்­வாக்கு இல்­லாமல் போய்­விடும் என்ற அவர்­களின் அச்­ச­மாகும்.

இன்­றைய அர­சாங்­கத்தை பொறுத்­த­வரை மக்கள் எதிர்­பார்த்த அள­வுக்கு ஒன்றும் நடை­பெ­ற­வில்­லை­யென்ற அதி­ருப்­தியே காணப்­ப­டு­கி­றது. சகல விட­யங்­க­ளிலும் இழுத்­த­டிப்பே காணப்­ப­டு­கி­றது. மீள்­கு­டி­யேற்­றப்­ப­டாமல் யாழ். மாவட்­டத்தில் வலி­காமம், காங்­கே­சன்­துறை, பலாலி, மயி­லிட்டி, ஊறணி பிர­தேச மக்கள் கடந்த 25 வரு­டங்­க­ளாக தெரு­வில்தான் நிற்­கி­றார்கள். இவர்­க­ளுக்கு ஒரு தீர்வை வழங்க முடி­யாத அர­சாங்கம் அர­சியல் தீர்­வொன்றை எப்­படி வழங்­கப்­போ­கி­றது என்­பது சந்­தேகம் தரு­கின்ற விட­யமே.

வடக்­கி­லுள்ள மக்கள் 34 இடைத்­தங்கல் முகாம்­களில் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இன்னும் பலர் வெளி­யேயும் தங்கி இருக்­கி­றார்கள். இவர்கள் குடி­யேற்­றப்­பட வேண்­டி­ய­வர்கள். ஆனால் புதிய அர­சாங்கம் இது சம்­பந்­த­மாக முயற்சி எடுப்­பதை எம்மால் காண முடி­ய­வில்லை. பெருந்­தொ­கை­யான காணி­களில் இரா­ணுவ முகாம் இன்னும் இருந்து கொண்­டி­ருக்­கி­றது. இவை இன்னும் தேவையா? என்ற கேள்­வி­யையே கேட்க வேண்­டி­யுள்­ளது.

1976ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து நான் இப்­ப­கு­தி­களில் சேவகம் செய்­தவன். மக்கள் எப்­படி வாழ்ந்­தார்கள் என்­ப­தையும் நான் நன்­றாக அறிவேன். அப்­ப­டிப்­பட்ட மக்­களை கால்­நூற்­றாண்­டுக்கு மேலாக தெருவில் நிறுத்தி வைத்­துக்­கொண்டு இன்­னு­மொரு தீர்­வையும் வழங்­காத இந்த அர­சாங்­கத்தை நாங்கள் எப்­படி நம்­பு­வது, தமிழ் மக்­களால் எப்­படி நம்ப முடியும்.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் சர்­வ­தே­சமும் பல்­வேறு ராஜ­தந்­தி­ரி­களும் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வொன்று முன்­வைக்­கப்­பட வேண்­டு­மென்ற அழுத்­தத்தை இலங்கை அர­சாங்­கத்­துக்கு கொடுத்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இம்­மு­யற்­சி­களின் பலன் எமக்கு கிடைக்க வாய்ப்­புண்டு. போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பாக கூறு­வ­தானால் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்­றுக்கு வரு­வ­தற்கு முன்­னமே தற்­போது குடா­நாட்டில் இடம்­பெற்­று­வரும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் முன் மக்கள் பய­மின்றி சென்று தமது உற­வி­னர்­க­ளுக்கு ஏற்­பட்ட அபத்­தங்­களை அநீ­தி­களை தெளி­வாக கூறு­கின்­றார்கள்.

இது முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டாகும். கடந்த அர­சாங்க காலத்தில் மக்கள் அச்­சத்­தினால் சாட்­சி­ய­ம­ளிக்க முன்­வ­ர­வில்லை. அப்­படி அளித்தால் வெள்ளை வான் வந்து கடத்­திக்­கொண்டு போய்­வி­டு­மென்ற பயந்தான் அதற்கு காரணம். ஆனால் தற்­போது நடை­பெறும் விசா­ர­ணையில் மக்கள் துணிந்­த­வர்­க­ளாக யார் செய்­தார்கள் எப்­படி நடந்­தது சம்­ப­வத்தின் சூத்­தி­ர­தா­ரிகள் யார் என பய­மின்றி கூறி­யுள்­ளார்கள். இது பெரி­ய­தொரு முன்­னேற்­ற­மாகும். இந்த சுதந்­தி­ரத்தை தற்­போ­தைய அர­சாங்கம் கொடுத்­தி­ருக்­கி­றது என்­பது பாராட்­டுக்­கு­ரிய விட­ய­மாகும்.

எனவே தான் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு நிரந்­த­ர­மான தீர்வை இலங்­கை­ய­ர­சாங்கம் உட­ன­டி­யாக சாசன ரீதி­யாக வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்­வ­தேச சமூ­கத்­தையும் ராஜ­தந்­தி­ரி­க­ளையும் விந­ய­மாக கேட்­டுக்­கொள்­கின்றேன். விசா­ர­ணை­களின் முடிவில் நல்­ல­தொரு முடி­வையும் மேற்­படி சமூகம் எடுக்­கு­மெ­னவும் நாம் எதிர்­பார்க்­கின்றோம்.

யாழ். புலத்தில் ஒரு சில அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தாலும் மக்கள் மத்­தியில் அதி­ருப்­தியே வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. அதற்கு காரணம் கடந்த 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக இடம்­பெ­யர்ந்து வாழும் மக்­களை சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்றம் செய்­ய­வில்லை. தமிழ் அர­சியல் கைதி­களை விரைவில் விடு­தலை செய்­வோ­மென்று புதிய அரசு வாக்­கு­றுதி அளித்­தது. அது நடை­பெ­ற­வில்லை. போரினால் பாதிக்­கப்­பட்ட வன்னி மக்­க­ளுக்கு உரிய வாழ்­வா­தாரம் உண்­டாக்கிக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. இந்­திய மீன்­பிடி பட­கு­களின் எல்லை தாண்டல் கார­ண­மாக பெருந்­தொகை மீன­வக்­கு­டும்­பங்கள் வடக்கில் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதே­வே­ளையில் கவ­லைக்­கு­ரிய விடயம் யாதெனில் தமிழ் அர­சியல் தலை­வர்கள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் ஒற்­று­மை­யில்லை. இவர்கள் அனை­வரும் மக்­களின் நன்மை கருதி ஒன்று சேர்ந்து மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண ஒன்­று­பட வேண்­டு­மென்­பதே எமது மான­சீ­க­மான கோரிக்­கை­யாகும்.

உதா­ர­ண­மாக வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வ­ர­னுக்கும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் அண்­மைக்­கா­ல­மாக மெல்­லிய தன­மாக முரண்­பாடு வளர்ந்­தி­ருப்­பது யாவரும் அறிந்த விட­ய­மாகும். இந்த முரண்­பாட்டை நிவர்த்தி செய்து சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த யாரா­வது முன்­வர வேண்டும். என்­னிடம் பலர் கேட்­டார்கள் இப்­ப­ணியை தாங்­களே முன்­னின்று செய்­யுங்­க­ளென்று. நான் அவர்­க­ளுக்கு கூறினேன் தற்­போது தான் ஆயர் பத­வியை பொறுப்­பேற்று உள்ளேன். 

அது சார்ந்த கட­மை­களை செய்ய முடி­யாது இருக்­கி­றது. உரிய கட­மை­களை செய்து முடித்து விட்டு உரிய முயற்­சி­களை மேற்­கொள்வேன் என கூறி­யுள்ளேன். தற்­பொ­ழுது வட­கி­ழக்­கி­லுள்ள சகல மக்­களும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கவலை கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள். கிடைத்­தி­ருக்கும் நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்து போகப்போகிறோமோ என்பது அவர்களின் கவலையாகும்.

வடக்கு முதல்வருக்கும் கூட்டமைப்புக்கிடையேயுள்ள உறவு நிலை விரிசல் சம்பந்தமாக நாங்கள் யாரையும் தனிப்பட்ட வகையில் குற்றம் சாட்ட முடியாது. குற்றம் சாட்டுவது அவசியமற்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை தமிழ் மக்களின் நன்மை கருதியே அவர்கள் சிந்திப்பார்கள். இதேவேளை வடக்கு முதல் அமைச்சரை பொறுத்தவரை வடக்கில் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகளை காரசாரமாக அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறுவார். 

மற்றவர்கள் மென்தன்மையுடன் கூறும் விடயங்கள் முதல் அமைச்சர் நீதியரசராக பணிபுரிந்த காரணத்தினால் யதார்த்தமாக கூறுவது இயல்பு. உள்ளதை தனது பாணியில் அவர் கூறியிருக்கலாம். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் கசப்புணர்வு ஏற்பட்டிருக்கலாம். எவ்வாறு இருந்த போதும் இரு தரப்பினருக்குமிடையில் விரைவில் புரிந்துணர்வு ஏற்படுமென்று நம்புகின்றேன்.

0 comments:

Post a Comment

-->